‘குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்யவேண்டும்’ – சுப்ரமணியசுவாமி வேண்டுகோள்!!

0
subramaniya swami request

இந்தியாவில் வருகின்ற ஜனவரி 26 ம் தேதி கொண்டாடப்பட உள்ள 71 வது குடியரசு தின விழா அணிவகுப்பை ரத்து செய்யவேண்டும் என பாஜக வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியரசுதினவிழா ரத்து

ஒவ்வொரு ஆண்டு தோறும் இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று குடியரசு தினவிழா ஆகும். குடியரசு தினவிழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மிகவும் கோலாகலமாக நடத்தப்படும். தற்போது பரவி வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த குடியரசு தின விழாவை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து பாஜக வின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி பிரதமர் மோடியிடம் டுவிட்டர் மூலம் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ‘வரும் குடியரசு தினத்தன்று நடைபெற இருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அணி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நியாயமானதாக இருக்காது’ என்று பதிவிட்டுள்ளார்.

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here