Tuesday, May 7, 2024

“கல்விச்செல்வதை அளித்த உத்தமர்கள்” – நன்றி தெரிவிப்போம் இன்று!!

Must Read

நம்மை செதுக்கியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இன்று “ஆசிரியர் தினம்” கொண்டாடப்படுகிறது.

“ஆசிரியர் என்னும் அச்சாணி”

நம்மை திறம்பட இந்த உலகத்தில் ஜொலிக்க வைத்தவர்கள் தான் நமது ஆசிரியர்கள். நமது நலனுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள். ஆண்டுதோறும் நமது நாட்டில் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

radhakrishnan
radhakrishnan

இந்த நாளில் ஆசிரியர்களின் உன்னதத்தை ஒவ்வொரு குழந்தையும் உணர வேண்டும். சிறப்புமிக்க கல்வி செல்வத்தை மாணவர்களுக்கு அளிப்பதால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றுகின்றனர். கல்வியை மட்டுமல்லாமல் வாழ்வியல் நெறிமுறைகளையும் அவர்கள் மாணவர்களுக்கு போதிக்கின்றனர்.

முதல்வர் வாழ்த்து:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசால் தேசிய அளவில் சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட 39 ஆசிரியர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் வாழ்த்து:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் கூறுகையில் “நான் கடந்த மாதம் நடைபெற்ற “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் சிறப்பினை கூறினேன். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.”

அக்டோபர் மாதம் ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும்!!

இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் காணொளி காட்சி மூலமாக சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்க உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -