கொல்கத்தாவில் ரூ.1,000க்கு விற்கப்படும் தேநீர் – அதிர்ச்சியில் மக்கள்!!

0

கொல்கத்தாவில் புகழ்மிக்க தேநீர் கடை ஒன்றில் ரூ.1000திற்கு தேநீர் விற்கப்படுகிறது. இந்த விலையை அறிந்த மக்கள் தற்போது வியப்படைந்துள்ளனர்.

தேநீர்:

மனிதர்கள் நாள்தோறும் தவறாமல் அருந்துவது தேநீர் தான். இது மனிதர்களுக்கு வேலை செய்யும் பொழுது புது உத்வேகத்தை அளித்து வருகிறது. மேலும் தற்போதைய காலங்களில் தேநீர்களில் பல வகை வந்துள்ளது. இஞ்சி தேநீர், லெமன் தேநீர் என நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளில் தற்போது தேநீர் விற்கப்பட்டு வருகிறது. மேலும் வகைகளுக்கேற்ப விலையும் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் புகழ்பெற்ற தேநீர் கடையில் தேநீரின் விலை ரூ.1,000 ஆக நிர்ணயித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொல்கத்தாவில் முகுந்த்புர் பகுதியில் நிர்ஜஸ் டீ ஸ்டால் இயங்கி வருகிறது. இந்த கடை சுமார் 7 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த கடையில் 100 வகையான டீ கிடைக்குமாம். தற்போது இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில் ‘வாடிக்கையாளர்களை கவரும் வகையில் லாவண்டர் டீ, டீஸ்டா வெளி டீ, மகாய்பாரி டீ என பல வகையான டீயை தயாரித்தேன். மேலும் பல்வேறு நாடுகளில் விளையும் தேயிலைகளையும் இறக்குமதி செய்து சரியான தட்ப வெப்பநிலையில் பாதுகாத்து தேநீரை தயாரித்து வருகிறேன்.

ஆண்கள் தாடி வளர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?? ஆய்வாளர்கள் தகவல்!!

தற்போது புதிதாக சில்வர் ஒயிட் டீயை தயாரிக்க சிந்தித்தேன். ஆனால் இதன் தேயிலையை விளைவிக்க மூன்று மடங்கு காலம் அதிகமாகும். மேலும் உற்பத்தி செலவும் மூன்று மடங்கு அதிகமாகும். இந்நிலையில் என் கடையில் உள்ள ‘போ லே’ என்னும் வகையான தேநீருக்கு விலையாக ரூ.1,000 நிர்ணயித்தேன். இந்த தேனீரை பணக்கார மக்கள் விருப்பத்துடன் அருந்தி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here