Wednesday, May 15, 2024

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்திற்கு மேலும் 3 மாதங்கள் காலஅவகாசம் – தமிழக அரசு உத்தரவு!!

Must Read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று கூறப்பட்ட புகாரை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமியின் ஆணையத்திற்கு தற்போது ஒன்பதாவது முறையாக தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

முதல்வர் மரணம்:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் சில உடல் உபாதைகளால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் பல மர்மம் உள்ளதாக பலர் கூறினர். இந்த வழக்கினை போலீசார் முறையாக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி விசாரணை குழு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவ குழு அமைத்து விசாரணை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து ஆறுமுகசாமியின் குழு விசாரணை நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக விசாரணை நிலுவையில் இருந்தது. பின், பல்வேறு காரணங்களால் தடை காலம் நீடிக்கப்பட்டு வந்தது. இந்த தடை உத்தரவு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முடிவடைந்தது. தமிழக அரசு எட்டாவது முறையாக நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. பின், அக்டோபர் 24 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

பல்வேறு காரணங்களால் 34 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஒன்பதாவது முறையாக மேலும் 3 மாத அவகாசத்தை தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -