தமிழக அரசு அலுவகங்களில் புதிய பணியிடங்கள் உருவாக்க தடை – செலவுகளை குறைக்க மாஸ்டர் பிளான்..!

0
Tamilnadu Government
Tamilnadu Government

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு செலவினங்களை குறைக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

அரசாணை வெளியீடு:

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளன. இதனால் பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ஊதியத்தில் கவனத்தை செலுத்தாமல், செலவினங்களை குறைக்க புதிய நடைமுறைகளை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் மொத்த செலவில் 20 சதவீதம் அளவிற்கு குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.
  • அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்.
  • நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி.
  • மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை.
  • சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்ய அனுமதி.
  • மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரெயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதி.
  • அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here