மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – முதல்வர் நேரில் விசிட்!!

0

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்டங்களுக்கு நேரில் சென்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளார்.

முதல்வர் நேரில் ஆய்வு:

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வரும் கொரோனா பாதிப்பு கடந்த ஒருசில நாட்களாக சற்று குறையத் தொடங்கி உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 56,998 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,96,483 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 4,132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை – முதல்வர் திட்டவட்டம்!!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளார். அதன்படி வரும் ஆகஸ்ட் 6,7 ஆகிய தேதிகளில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here