தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை – முதல்வர் திட்டவட்டம்!!

0

மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கையில் ஒன்றான மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ளார்.

இருமொழிக் கொள்கை:

பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 3ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை, 5ம் வகுப்பு வரை கட்டாய தாய்மொழிப் பாடம் உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. மும்மொழிக் கொள்கையில் இருக்க வேண்டிய மொழிகளை மாநிலங்கள் முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கர்நாடக முதல் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

ஆலோசனையில் உரையாற்றிய முதல்வர், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை, இருமொழிக் கொள்கை தான் தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவித்து உள்ளார். 1968ம் ஆண்டு முதல்வர் அண்ணா தலைமையில் சட்டமன்ற தீர்மானத்தின் போது தமிழகத்தில் இருந்து இந்தி மொழி நீக்கபட்டது. தமிழக மக்களின் மனதில் 80 ஆண்டுகளாக இருமொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளனர். எனவே தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here