தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு & புதிய கல்வி கொள்கை – முதல்வர் இன்று ஆலோசனை!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் மத்திய அரசு ஒப்புதல் அளித்த புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

முதல்வர் ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதத்திற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. மேலும் மாணவர்களுக்கு புத்தகங்கள், புத்தகப்பை போன்றவை வழங்கப்பட உள்ளது. இதில் கொரோனா பாதிப்பு வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு மும்மொழி கல்வி, 5ம் வகுப்பு வரை தாய்மொழிப் பாடம், M.Phil படிப்புகள் நிறுத்தம் போன்ற பல்வேறு அறிவுறுப்புகள் கொண்ட புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

கர்நாடக முதல் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

இது குறித்தும், பள்ளிகளை மீண்டும் திறப்பது மற்றும் அதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வகுப்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here