‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள் தான்’ – முதல்வர் பழனிசாமி கருத்து!!

0

கொரோனா கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வரு மாவட்டங்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலம் சென்றுள்ள முதல்வர் “எம்.ஜி.ஆர் மற்றும்  ஜெயலலிதாவின் வாரிசு மக்கள் தான்” என்று கூறியுள்ளார்.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி :

கொரோனா கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் மக்கள் தேவைக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் சேலத்தில் மினிகிளினிக் திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது உரையாற்றிய அவர் ” திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு அணைத்து விதமான நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அதிமுக கட்சியை துவக்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின்பு ஜெயலலிதா அவர்கள்  இந்த கட்சியின் நோக்கங்களை சிறப்பாக கடைபிடித்து பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். திரு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவிற்கு வாரிசுகள் கிடையாது , அவர்களின் வாரிசு மக்கள் தான் ” என்றும் கூறியுள்ளார். கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்காகவே இந்த மினிகிளினிக் திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

‘நான் சித்ராவை அந்த மாதிரி  எதுவுமே பண்ணல’ – ரக்சன் பேட்டி!! 

அதுமட்டுமல்லாமல் மாவட்டங்கள் தோறும் கொரோனா பாதிப்பு குறித்து நேரில் விசாரித்து வருகிறேன்.ஆனால் எதிர்க்கட்சி தலைவரான திரு.ஸ்டாலின் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் முலம்  தனது கட்சியின் தொடர்களின் கருத்தை கேட்டு நம் அரசை குரை கூறி வருகிறார். திமுக அணியினர் அனைவரும் தனது குடும்பங்களுக்காக மட்டுமே சுயநலமாக சிந்தித்து செயல்படுவார்கள் என்று முதலமைச்சர் விமர்சித்துள்ளார். ஆனால் அதிமுக அரசு மக்களின் தேவைக்கேற்ப உதவும் பல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here