ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் – ‘பலே பாண்டியன்’ வங்கி லாக்கரை திறக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!!

0

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது, சுற்றுசூழல் கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரை சோதனையிட திட்டமிட்டுள்ளனர். அவரது லாக்கரில் பல மதிப்புள்ள பணம், நகை மற்றும் பொருட்கள் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சந்தேகம்:

தமிழகத்தின் சுற்றுசூழல் கண்காணிப்பாளரான பாண்டியனின் வீட்டில் தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை இட்டனர். அதே போல் அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. அப்போது, ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதே போல் கண்காணிப்பாளர் பாண்டியனை விசாரிக்க அவரை நேரில் வர சொல்லி சம்மனும் அனுப்பினர். இப்படியான நிலையில், பாண்டியன் தனது வங்கி லாக்கரில் பணம், சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை பதுக்கி வைத்திருக்க கூடும் என்று சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது வங்கி லாக்கரை சோதனையிட முடிவும் செய்துள்ளனர். சோதனைகளுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பாண்டியன் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.

7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 2 வயது குழந்தை!!

அவரிடம் ஏற்கனவே 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 7 கோடி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் அவர் வாய்ப்பு தொகையாக 37 லட்சம் வைத்துள்ளார் என்ற தகவலும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரை தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here