வட்டித்தொகையை 6 மாதங்கள் ரத்து செய்ய வேண்டும் – பிரதமரிடம் முதல்வர் பழனிசாமியின் கோரிக்கைகள்..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர். இதில் தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளார்.

கூடுதல் நிதி:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1900ஐ நெருங்கி உள்ளது. மேலும் உயிரிழப்புகளும் 24 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் விபரம் குறித்து தெரிவித்த முதல்வர் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து உள்ளார். அதன் விபரம்,

  • தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் (உணவு மற்றும் தானியங்கள் ஒதுக்கீடு) வழங்க ரூ. 1321 கோடி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • நாள் ஒன்றுக்கு கொரோனா 10,000 பரிசோதனைகள் கூடுதலாக செய்ய பிசிஆர் கருவிகளை வழங்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்கள் GST வரி & வருமான வரி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். டிசம்பர் – ஜனவரி மாதத்திற்கான GST TAX இழப்பீடுத் தொகையை விடுவிக்க வேண்டும்.
  • சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வாங்கி உள்ள கடன்களுக்கான வட்டிகளை 6 மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
  • 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக தாங்களே கொண்டு செல்ல போக்குவரத்து தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here