கொரோனவால் மீண்டெழுந்த இயற்கை வளங்கள் – ஓசோன் படலத்தின் மிகப்பெரிய ஓட்டை மூடப்பட்டது

0

உலகளவில் கொரோனவால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளது. மக்களும் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றன. இதனால் மாசுபாடு குறைந்து இயற்கை வளங்கள் உயிர்பெற்று வருகின்றன. அந்த வகையில் உலகை சூரியனின் புறஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தில் இருந்த பிரம்மாண்ட ஓட்டை மூடப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ஓசோன் படலம்:

பூமியை பாதுகாப்பதில் ஓசோன் படலம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுபாடுகளால் அத்தகைய ஓசோன் படலத்தின் ஆங்காங்கே ஓட்டைகள் விழுந்துள்ளது. இது மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். தற்போது உலக மக்களை காவு வாங்கி வரும் கொரோனா இயற்கை வளங்களுக்கு மிகப்பெரிய நன்மையை செய்துள்ளது. கொரோனவால் உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாசுபடுகள் பெருமளவு குறைந்துள்ளது.

30 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 2 லட்சத்தை தாண்டிய உயிர்பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

உலகின் வட துருவத்தில் கடந்த மார்ச் மாதம் கண்டறியப்பட்ட ஓசோன் படலத்தில் ஏற்பட்டு இருந்த பிரம்மாண்ட ஓட்டை மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் மாசுபாடுகள் குறைந்து உள்ளதால் ஏப்ரல் 23ஆம் தேதி ஆர்க்டிக் பகுதியில் உள்ள பிரம்மாண்ட ஓசோன் படலத்தின் ஓட்டை மூடப்பட்டிருப்பதாக ஐரோப்பிய செயற்கைக்கோளான கோபர்நிகஸ் உறுதிப்படுத்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here