அரசு பள்ளிகளில் CCTV கேமரா..! 110 வது விதியின் கீழ் இ.பி.எஸ் வெளியிட்ட அறிவிப்புகள்..!

0

சட்டசபையில் முதலவர் இ.பி.எஸ் அவர்கள் 110 வது விதியின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகள் அறிவித்துள்ளார்.

இ.பி.எஸ். வெளியிட்ட அறிவிப்புகள்..!

  • தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கேமராகள்  பொருத்தப்படும்.
  • ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும்.
  • சென்னை வேளச்சேரியில் வனத்துறை அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கீடு.
  •  வனங்களில் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்பு காவல்படை உருவாக்கப்படும்.
  • நெருப்புக்கோழி, மலைப்பாம்பு ஆகிய விலங்குகள் கொண்டு நடுத்தர வன உயிரின பூங்கா ரூ.10 கோடியில் உருவாக்கப்படும்.
  • சேலம் குரும்பப்பட்டியில் சிறு வன உயிரின பூங்கா, நடுத்தர வன உயிரின பூங்காவாக தரம் உயர்த்த ரூ.8 கோடி ஒதுக்கீடு.
  • திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
  • 30 அரசு உயர்நிலை பள்ளிகள் ரூ.55 கோடியில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
  •  10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • ஆரணி நகராட்சியில் அமைந்துள்ள சூரிய குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பாதுகாப்பு வேலி ரூ.6 கோடியில் அமைக்கப்படும்.
  • யானைகள் காடுகளில் இருந்து வெளியேறுவதை தடுக்க எக்கு கம்பியூடன் கூடிய சிமென்ட் கான்கீரீட் ரூ.27 கோடியில் அமைக்கப்படும்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here