Wednesday, May 8, 2024

தொல்லியல் துறை முதுகலை பட்டய படிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு – செம்மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்!!

Must Read

தொல்லியல் முதுகலை பட்டய படிப்பில் தமிழ் மொழியினை சேர்த்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி வந்ததை அடுத்து தற்போது முதுகலை பட்டய படிப்பில் தமிழ் உட்பட 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சேர்க்கை அறிவிப்பு:

ஆண்டுதோறும் தொல்லியல் கல்வி நிறுவனம் ஆன தீனதயாள் உபாத்யாயா சார்பில் தொல்லியல் படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். அதே போல் 2020 – 2022 கல்வி ஆண்டிற்கான முதுகலை பட்டய படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் மொழி கல்வி தகுதியாக ஏதேனும் ஒரு மொழி கற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த பட்டியல் கடந்த சில வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அந்த பட்டியலில் சமஷ்கிருதம், பாலி, பிராகிருதம், உருது இதில் ஏதேனும் ஒன்றில் முதுகலை அளவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த பட்டியலில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி. செம்மொழியான தமிழ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி இடம் பெறாமல் இருந்தது புறக்கணிப்பின் உச்சமாக கருதப்பட்டது.

முதல்வர் கடிதம்:

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் பல மொழியியல் அறிஞர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இப்படியாக இருக்க, கடந்த சில வருடங்களில் இந்தியாவில் மட்டும் 48 ஆயிரத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. 28 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் தான் இருந்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் “கண்டுக்கப்பட்ட கல்வெட்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் மொழியில் தான் உள்ளது. அதனால் மொழி கல்வி தகுதி பட்டியலில் தமிழ் மொழி சேர்க்கபட வேண்டும். தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்படும் அறிவிப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இந்த விவகாரத்தில் தங்களின் தலையீடு இருந்தால் மிகுந்த பாராட்டுதல்களுக்கு உரியதாக இருக்கும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து, தொல்லியல் துறை தமிழ் மொழியினை மொழி கல்வி தகுதி பட்டியலில் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X