40 வயதிலும் இளமையாக ஜொலிக்க சூப்பர் டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
nazriya

நாம் ஏதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போதோ அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது மட்டும் தான் நமது முகத்திற்கான பராமரிப்பை மேற்கொள்கிறோம். ஆனால் அன்றாடம் நாம் முகத்தை பராமரித்தால் மட்டுமே 40 வயதிற்கு மேலும் முகப்பொலிவுடன் இருக்க முடியும்.

முக பொலிவை அதிகரிக்க??

முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் இருக்கும் மாசுக்கள் நம் முகத்தில் படிவதால் மட்டுமே. மேலும் வெளியே சென்று வரும்போது முகத்தை கழுவுவது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் நம்மில் பலர் அதனை கைப்பிடிப்பது கிடையாது. இதனால் முகத்தில் அந்த தூசுகள் படிந்து இறந்த செல்களாக மாறி முகத்தில் ஆங்காங்கே கருமை ஏற்படுகிறது.

beauty tips
beauty tips

இதற்கு நாம் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் பொருட்களை வாங்கி உபயோகிப்பது மேலும் சருமத்திற்கு தீங்கை தான் விளைவிக்கும். இதனால் முடிந்த வரை வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முகத்தின் அழகை பராமரிக்கலாம். இதனால் நாம் வெளியில் செல்லும்போது மேக்கப் போடுவதற்கான அவசியமும் ஏற்படாது. இப்பொழுது முக அழகை பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

golden facial
golden facial

முல்தானி மெட்டி

உருளைக்கிழங்கு

எலுமிச்சை சாறு

புதினா

தக்காளி

மஞ்சள்தூள்

ஆரஞ்சு தோல் பவுடர்

ரோஸ் வாட்டர்

வழிமுறைகள்

  • முதலில் பாலை எடுத்து முகத்தில் தடவி கொள்ளவும். நாம் எந்த பேசியல் செய்தாலும் முதலில் பாலை முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஏனெனில் சருமத்திற்குள் இருக்கும் அழுக்குகளை இந்த பால் வெளியேற்றும்
beauty tips
beauty tips
  • அதன் பிறகு தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை மஞ்சளில் தோய்த்து முகத்தில் மேலும் கீழுமாக தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • அடுத்ததாக உருளைக்கிழங்கை சாறு எடுத்துக் கொளுங்கள். அந்த சாறுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். முகத்தில் அழுக்குகள் இருந்தால் எரிச்சலாக இருக்கும்.
facial tips in tamil
facial tips in tamil
  • அதன் பிறகு முல்தானி மெட்டி, ஆரஞ்சு பழ தோல், பால், ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் தடவ வேண்டும். நன்கு காய்ந்ததும் கழுவ வேண்டும். இப்பொழுது முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி இருக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் போதுமானது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் 40 வயதிலும் இளமையாக தோற்றமளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here