தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0

உள் கர்நாடகா முதல் கேரள வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று(மே 7) வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலுமான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனீ, கன்னியாகுமரி, திருநெல்வவேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. 08.05.2021 அன்று வட தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நீலகிரி, தேனீ, கன்னியாகுமரி, திருநெல்வவேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 09.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையையே நிலவும்.

கொரோனா நிவாரணமாக ரூ.4000, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

10.05.2021 மற்றும் 11.05.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்ப ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகமாக இருக்கும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

11.05.2021 முதல் 13.05..2021 வரை மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் தமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியாசக இருக்கும்.

சுல்தான் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ‘பாக்கியலட்சுமி’ பிரபலம் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

காற்றில் ஒப்ப ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்க கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பர்லியார் 14, அலகாரி எஸ்டேட் 8, போடிநாயக்கனூர், குன்னூர் தலா 7, பெரியகுளம்,பில்லிமலை எஸ்டேட் தலா 4, சூரன்குடி, அம்பாசமுத்திரம் தலா 3, சாத்தூர், சங்கரன்கோவில், பேரையூர், மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here