சுல்தான் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ‘பாக்கியலட்சுமி’ பிரபலம் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் எழில் சுல்தான் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில்

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் மகள் மயூ பாக்கியா வீட்டில் தங்கி இருப்பதை அடுத்து கோபி அவரிடம் எப்படி தப்பிப்பது என்று பலவாறு யோசனை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பது என பல ரகளைகளை செய்து கொண்டுள்ளார்.

கொரோனா நிவாரணமாக ரூ.4000, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

இது எழிலுக்கு மேலும் பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது. எழில் வந்து அம்மாவை இனிமேல் ஏமாத்தாதீங்க என்று அவ்வளவு சொல்லியும் மீண்டும் ராதிகாவிடமே செல்கிறார். மயூவுக்கும் கோபி பழக்கம் என்பதால் தன்னை கண்டு பிடித்து விடுவாரோ என்று பயப்படுகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் காய்ச்சல் என்று சொல்லி ரூமிலேயே இருக்கிறார் கோபி. முகத்தில் மாஸ்க் போட்டதால் மயூவுக்கு அடையாளமும் தெரியவில்லை. எப்படியும் மயூ கோபியை பார்க்க வாய்ப்பும் குறைவு தான். இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் பாக்கியலட்சுமி ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

அதிலும் எழிலுக்கு தான் ரசிகர்கள் அதிகம். ஏனெனில் அம்மாவுக்கு எதுவும் நடக்காமல் எல்லாவற்றிற்கும் உறுதுணையாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார். தற்போது ‘வா சுல்தான் வா’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here