கொரோனா நிவாரணமாக ரூ.4000, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!

2

தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று பதவி ஏற்றுள்ள ஸ்டாலின் தற்போது மக்களுக்கு பயனடையும் வகையில் பல்வேறு நல திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர்:

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலின் இன்று காலை 9 மணி அளவில் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். இவர் தமிழகத்தின் முதல்வரான பின்பு மக்களுக்கு பயணடையும் வகையில் பல திட்டங்களை மேற்கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். தற்போது மக்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இவர் பிரச்சாரத்தின் பொழுது அறிவித்த திட்டங்களை தற்போது அமல்படுத்தி வருகிறார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழக முதல்வரின் புதிய அறிவிப்புகள்:

  • கொரோனா நிவாரண தொகையாக ரூ.4,000 வழங்கப்படும். அதில் முதல் தவணையாக ரூ.2,000 இந்த மாதமே வழங்கப்படும்.
  • அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2.07கோடி குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும்.
  • ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். இந்த திட்டம் மே மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
  • அனைத்து மகளிரும், சாதாரண கட்டண நகர பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம்.
  • கொரோனா நோய்த்தொற்று பாதிப்பிற்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தால் அதற்குரிய கட்டணத்தை முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

2 COMMENTS

  1. Vanakkam sir tamilnadu people fulla ungala namburanga all the best Sir Life Time achieve ment award vanganum neenga unga sevai dhodaranum.hands of you sir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here