தமிழக முதல்வரின் புதிய செயலாளர்கள் – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

1

தமிழகத்தின் அடுத்த புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றார். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாளர்கள்:

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்பு திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் திமுக கட்சி தனி பெரும்பான்மையுடன் 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் முதன்முறையாக பதவி ஏற்றுள்ளார். இவர் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவருக்கு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்ற பின்பு முதல் கட்டமாக 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அவை அனைத்தும் மக்களுக்கு மிக்க பயனுள்ள திட்டமாகும். மேலும் அவை அனைத்தும் ஸ்டாலின் பிரச்சாரத்தை போது கூறிய வாக்குறுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய முதல்வரான ஸ்டாலினுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி முதல்வரின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் உமாநாத் ஐஏஎஸ், எம்.எஸ்.சண்முகம் ஐஏஎஸ், அணு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதிஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here