சாத்தான்குளம் சம்பவம் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

0

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..!

சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.அவர்கள் சிறையிலேயே அடுத்தடுத்து இறந்ததை அடுத்து போலீசாரை கண்டித்து சாத்தான்குளத்தில் பொதுமக்கள் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வலியுறுத்தல்..!

இதையடுத்து வணிகர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரிக்க வலியுறுத்தினர். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது நிபுணர்களுக்கு பேட்டியளித்தபோது சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மீது செல்போன் கடையை மூடுவது சம்பந்தமான பிரச்னையில் வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதையடுத்து சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.

காவல்துறைக்கு அறிவுரை..!

உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதனை தெரிவித்து அனுமதி பெற்று சிபிஐயிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இத்தகைய சம்பவங்கள் இனிமேல் நடக்க கூடாது என்பதற்காக ஏற்கனவே காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். பிரச்னை என்றால் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேவையில்லாமல் மக்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here