அண்ணாத்த படம் இவர்களுக்கு வசூல் வேட்டை – ஆனால் அவர்களுக்கு பெருத்த நஷ்டம் தான்!!

0

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் மொத்தமாக 190 கோடி ரூபாய்க்கு தான் இதுவரை வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

குறைந்த தொகையில் வியாபாரம்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் அண்ணாத்த.  வருகிற தீபாவளியை முன்னிட்டு இந்த படம் ரிலீசாக உள்ளது.  இந்த நிலையில் தமிழில் மட்டுமில்லாமல், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த படம் ரிலீசாகிறது.  இந்த படம், 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.  ஆனால், திரையரங்கத்தில் 190 கோடி ரூபாய் வரை மட்டுமே இந்த வசூல் ஈட்டியுள்ளது.

பெரிய நடிகரின் படம் எடுக்கப்பட்ட தொகையை விட 10 கோடி ரூபாய் மட்டுமே அதிகமாக வசூல் செய்துள்ள சம்பவம் விநியோகிஸ்தர்கள் மற்றும் உரிமையாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால், அதன் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் வாங்கி வைத்துள்ளது.  இது போக இதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளை வைத்திருக்க கூடிய அந்த நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here