Monday, April 29, 2024

donald trump

அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற தற்காலிக தடை – டிரம்ப் உத்தரவு.!

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7,92, 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்த கொரோனாவால் உலக பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து...

அமெரிக்கா ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.  நீண்ட நாட்களாக அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையில் போர் பதற்றம் நிகழ்ந்து வருகிறது.  முக்கிய காரணம்: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்தது. ஈரான் பரபரப்பு அறிவிப்பு: இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.  ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது.  இதற்காக ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.  இந்த முப்படைகளை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார். இது அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img