அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற தற்காலிக தடை – டிரம்ப் உத்தரவு.!

0

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7,92, 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

Coronavirus: Donald Trump names 6 NRIs in Great American Economic ...

இந்த கொரோனாவால் உலக பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து போய் உள்ளனர். இந்த கொரோனா பாதிப்பிற்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியாத நிலையில் சமூக விலகல் ஒன்றே இதற்கான மருந்து. அமெரிக்காவில் இந்த கொரோனாவால் அனைவரும் பீதியில் உள்ளனர்.

மேலும் டிரம்ப் தனது ட்விட்டர் பகுதியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, “கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும், அமெரிக்க குடிமகன்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், வெளிநாட்டவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன். இவ்வாறு டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here