இந்தியாவில் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தும் ஒரு காரணம் – மத்திய அரசு விளக்கம்!!

1
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!

இந்தியாவில் கொரோனா காரணமாக மார்ச் 23 முதல் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா சில மாநிலங்களில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதற்கு தப்லீக் ஜமாத்தில் கூடியது ஒரு முக்கிய காரணம் என மத்திய அரசு கூறியுள்ளது.

கொரோனா

கொரோனா தற்போது நாடுகள் எங்கிலும் பரவி வருகிறது. உலக வல்லரசு நாடுகளையே இது ஆட்டிப்படைத்து வைத்தது. மேலும் பல உயிரிழப்புகளையும் கொரோனாவால் சந்தித்து வருகிறோம். இப்பொழுது மார்ச் 24 இல் தொடங்கிய கொரோனா ஊரடங்கு தற்போது செப்டம்பர் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இப்படி நீடித்துக்கொண்டிருக்க கொரோனா இந்தியாவில் பரவியதற்கு தப்லீக் ஜமாத் ஒரு முக்கிய காரணம் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத் தொடர்பாக சிவசேனா எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி இதற்கு எழுத்துபூர்வமாக பதில் கூறியிருக்கிறார்.

thalik
thalik

அதில் கூறியிருந்ததாவது, மார்ச் 29 இல் டெல்லியில் கொரோனா விதிமுறைகளை மீறி தப்லீக் ஜமாத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். மேலும் இவர்கள் எந்த சமூக இடைவெளியையும் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் கூடியுள்ளனர். இதனால் 236 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2361 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தப்லீக் ஜமாத்தில் பலரும் கூடியது இந்தியாவில் கொரோனா பரவியதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளது.

1 COMMENT

  1. மூதேவி உண்மையை மறைத்து பொய் சொல்லி திரியுது.
    அப்போ airport திறந்து வச்சது, யாரையும் medical checkup பண்ணாம அனுமதி கொடுத்தது, இதல்லாம் யார் செஞ்சது.
    கூட்டம் கூட்டமாக இவனுங்க திரிஞ்சது இதெல்லாம் kaaranamillaaiyaa
    வந்தவங்களுக்கு கொரோனா இல்லைனு medical checkup செஞ்சவங்க சொல்லிட்டாங்க அப்போ யாரால வந்தது
    விருந்துவச்சி நீங்க கூப்டீங்களா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here