சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் – நேருக்கு நேர்!!

0

ஐபிஎல் 13வது சீசனின் 4வது போட்டியில் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை அணியின் அதிரடி தொடருமா அல்லது ராஜஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் 2020:

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்த தொடர்களில் சொதப்பியதால் வெற்றிக்கனியை பறிக்க முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று இரவு 7:30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் தொடரில் இருந்து விலகினாலும் சாம் கரன் போன்ற இளம் வீரர்கள் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர். ஏற்கனவே முதல் போட்டியில் மும்பையை வென்ற உற்சாகத்தில் உள்ள சிஎஸ்கே 2வது போட்டியிலும் அதிரடி காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஸ்டீவ் ஸ்மித் இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஆக களம் காண்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ஸ்டார் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் விளையாடாதது ராஜஸ்தான் அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும். மேலும், மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது ஸ்மித்துக்கு ஒரு பலவீனமாகும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் டாம் குர்ரான் போன்ற சிறந்த பவுலர்கள் ராஜஸ்தான் அணிக்கு தூண்களாக உள்ளனர். இதனால் பேட்டிங் பிரிவில் மட்டும் ஸ்டீவ் ஸ்மித் அதிக கவனம் செலுத்தினால் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கலாம்.

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 21 முறை மோதியுள்ளது. அதில் சி.எஸ்.கே 14 முறை, ராஜஸ்தான் 7 முறை வென்றுள்ளது. .

இன்றைய போட்டிக்கான உத்தேச அணி:

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜெய்ஸ்வால், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் (wk), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ரியான் பராக், டேவிட் மில்லர், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஓஷன் தாமஸ், ஜெய்தேவ் உனட்கட், அனிருத்தா ஜோஷி

சென்னை சூப்பர் கிங்ஸ்: முரளி விஜய், ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளெசிஸ், அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (கேப்டன் & wk), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி என்ஜிடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here