சையது முஸ்தாக் அலி போட்டிக்கான தமிழக அணி அறிவிப்பு – முக்கிய வீரர்கள் இல்லை!!

0

சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி மாதம் தொடங்கவிருக்கிறது. இதற்கான தமிழக அணியின் வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் முக்கியமான வீரர்கள் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சையது முஸ்தாக் அலி:

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் சையது முஸ்தாக் அலி டி 20 போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஐபிஎல் போட்டிக்கு முன் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. தற்போது தமிழக அணியும் தங்களது வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமான வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அறிவித்துள்ள தமிழக அணியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும் துணை கேப்டனாக விஜய் ஷங்கர் உள்ளார். இதற்கிடையில் அஸ்வின், நடராஜன், வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இந்த அணியில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஆனால் முரளி விஜய் தனது சொந்த காரணங்களுக்காக இந்த போட்டியிலிருந்து விலகியுள்ளார். எனவே இவர் பெயரும் அணியில் இடம்பெறவில்லை.

’17 ஆண்டுகள், 644 கோல்கள்’ – பீலேவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி!!

மேலும் தமிழக அணியில் முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. இதற்கு காரணம் வருண் சக்ரவர்த்தி காயத்தினால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் தமிழக வீரர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள். அதனால் அவர்களால் இந்த போட்டிகளில் விளையாட முடியாது. எனவே அவர்களின் பெயர் தமிழக அணியில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக அணியின் பெயர் பட்டியல்:

தினேஷ் கார்த்திக்(C), முருகன் அஸ்வின், விஜய சங்கர் (VC), சாயி கிஷோர், அபராஜித் சித்தார், இந்திரஜித், சூர்யபிரகாஷ், ஷாருக் கான், அஸ்வின் கிறிஸ்ட், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், அருண் கார்த்திக் கவுசிக், பிரதோஷ் ரஞ்சன், பால் பெரியசாமி, எம் முகமது, சந்தீப் வாரியார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here