சிம்பு & கவுதம் கார்த்திக்கின் புதிய படம் ‘பத்து தல’ – 10 இயக்குனர்கள் வெளியிட்ட டைட்டில்!!

0

பிரபல நடிகர்கள் சிம்பு மற்றும் கவுதம் கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் பெயரினை தமிழ் திரையுலகின் 10 இயக்குனர்கள் சேர்ந்து வெளியிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு ‘பத்து தல’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துளளனர்.

சிம்புவின் புதிய படம்:

கொரோனா பரவல் அச்சத்திற்கு பிறகு தற்போது தான் படப் பிடிப்புகள் முன்பு போல துவங்கியுள்ளது. நிலுவையில் உள்ள படங்களுக்கான ஷூட்டிங் தற்போது ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் சிலம்பரசன் இணைத்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இது கன்னட படமான “முப்டி” ரீமேக் ஆகும். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் சில வருடங்களுக்கு முன்பே துவங்கி விட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், சிம்புவிற்கும் இந்த படத்தை தயாரிக்க இருந்த நிறுவனத்திற்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் ஷூட்டிங் முடக்கப்பட்டது. தற்போது சிம்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருவதால் இந்த படத்திலும் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவருடன் நடிகர் கவுதம் கார்த்திக்கும் சேர்ந்து நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பெயரை தமிழ் திரையுலகின் பிரபலமான 10 இயக்குனர்கள் வெளியிட்டு உள்ளனர்.

அப்பா துபாயில் தான் இருக்காரா?? கண்ணம்மாவை சந்தேகப்படும் லட்சுமி!!

இந்த படத்தினை ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு ‘பத்து தல’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதனை பிரபல இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ஆனந்த் ஷங்கர், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், ராஜேஷ், சாம் ஆண்டான், சந்தோஷ் ஜெயக்குமார், அஸ்வத் மாரிமுத்து ஆகியோர் இணைத்து வெளியிட்டு உள்ளனர். இப்படத்தை ஜில்லுனு ஒரு காதல்” படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here