2,000 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து – மாநில முதல்வர் அதிரடி!!

1

ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.2000 கோடி விவசாய கடனை, தள்ளுபடி செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதாக அமைச்சரவை செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயக்கடன் ரத்து:

ஜார்கண்ட் மாநிலத்தில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, முதல்வர் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திலூள்ள 9,07,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான திட்டத்திலும் திருத்தங்களை செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், இனி தகுதி வாய்ந்த அனுபவம் மிக்க உற்பத்தியாளர்களுக்கே அங்கன்வாடிகளுக்கு ரேஷன் அரிசி வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் எனவும், மாநிலம் முழுவதுமுள்ள 38,432 அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடுகளுக்கு மத்திய ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நேரடியாக அரிசி விநியோகம் செய்ய தனியார் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் திலகம்’ எம்ஜிஆர் 33வது நினைவு தினம்!!

இதனிடையே வரும் 29 ம் தேதியுடன் முதல்வர் சோரன் பதவியேற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என ஜார்கண்ட் வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விவசாய கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு ஜார்கண்ட் விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

1 COMMENT

  1. நம்ம ஊர்ல எப்பம் விவசாய கடன் தள்ளுபடி பண்ணுவீங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here