வரலாற்றில் இன்று – ‘மக்கள் திலகம்’ எம்ஜிஆர் 33வது நினைவு தினம்!!

0

மக்கள் திலகம் எனவும் புரட்சித்தலைவர் எனவும் மக்களால் அன்போடு அழைக்கப்படும், எம்.ஜி.ஆர். அவர்களின் 33 வது நினைவு தினமான இன்று அவரது, தொண்டர்களும் ரசிகர்களும் அவரை அன்புடன் நினைவு கூர்கின்றனர்.

எம்ஜிஆர் நினைவு தினம்:

பிறப்பினால் மலையாள தேசத்தை சேர்ந்த அவர், வாழ்வாதாரம் தேடி இலங்கைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தார். அவரது தந்தையின் மறைவுக்கு பின் தமிழகம் வந்த அவரது குடும்பம் வறுமையில் வாடவே, அவர் சிறுவயது முதலே நாடக கம்பெனிகளில் சேர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். அவரது தணியாத ஆர்வம் காரணமாக 1933ல் சதிலீலாவதி என்ற படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். அதன் பின்பு அவருக்கு மந்திரி குமாரி எனும் படத்தில் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு இன்று வரை மிக சிறந்த காதாநாயகனாகவே வைத்திருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் அவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தன. மலைக்கள்ளன், ஆயிரத்தில் ஒருவன், அரசகட்டளை, அன்பே வா என்று அவரது வெற்றி படங்களின் பட்டியல் மிக நீண்டது. நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார். அவரது தயாரிப்பு மாற்றும் இயக்கத்தில் வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியினை பெற்றது.

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தல், ஏழைகளுக்கு உதவுதல் என அவர் கட்டமைத்த நாயகப் பிம்பத்தை இன்று வரை பல்வேறு முன்னணி கதாநாயகர்களும் பின்பற்றி வருகின்றனர். ரிக்சாக்காரன் திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்றவருக்கு, இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குப்பைக்கு தனி கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைப்பு!!

அரசியலிலும் மக்கள் முதல்வராக கொண்டாடப்பட்டார். அவர் பெயரை சொன்னாலே ஓட்டுகள் விழும் என்ற நிலையில், உடல்நலம் சரியில்லாமல் போனபோது, பிரச்சாரத்துக்கு வராமலேயே தேர்தலில் ஜெயித்து முதல்வரானார். நாட்டு நலப்பணிகளிலும், மாணவர் நலனுக்காகவும் அவர் செய்த சேவைகளை தமிழுலகம் என்றும் மறக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here