’17 ஆண்டுகள், 644 கோல்கள்’ – பீலேவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி!!

0

பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவானான பீலேவின் சாதனையை 46 ஆண்டுகளுக்கு முறியடித்து அசத்தியுள்ளார் மெஸ்ஸி. இதனால் கால்பந்து நட்சத்திரங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பீலே & மெஸ்ஸி:

பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே. கால்பந்தாட்ட போட்டியில் முடி சூடா மன்னனாக இன்றும் திகழ்ந்து வருகிறார். இவர் தான் அமெரிக்காவில் கால்பந்தாட்ட போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்க்கையில் மொத்தம் 22 ஆண்டுகள் கால்பந்து போட்டிகள் விளையாடியுள்ளார் பீலே. அதில் இவர் மொத்தம் 1282 கோல்களை அடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் விளையாடும் போட்டிகளில் ஹாட்ரிக் கோல்களை அடிப்பதில் வல்லவர். இவர் மொத்தம் 92 முறை ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார். இவர் பிரேசிலை சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்தது இதுவரை சாதனையாக இருந்தது.

இந்திய அணியுடன் இணையும் ஹிட்மேன் – 3வது டெஸ்டில் விளையாட வாய்ப்பு!!

தற்போது இவரின் இந்த சாதனையை 46 ஆண்டுகளுக்கு பின் மெஸ்ஸி முறியடித்து அசத்தியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் பிரபலமான லிகா கால்பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட் அணியை வீழ்த்தி அசத்தியது. போட்டியின் 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார்.

பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644-வது (749 போட்டிகள்) கோல் இதுவாகும். இதுவரை ஓர் கிளப்பிற்காகாக அதிக கோல்களை அடித்த வீரர்களில் பீலேவின் சாதனை 46 ஆண்டுகளுக்கு பின் முறியடித்து அசத்தியுள்ளார்.

இதனை அடுத்து பேட்டியளித்த மெஸ்ஸி கூறியதாவது, “பார்சிலோனா கிளப்பிற்காக 17 ஆண்டுகள் விளையாடி வருகிறேன், கால்பந்து போட்டிகளில் நான் என் சாதனையை பதிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் தற்போது ஜாம்பவான் பீலேவின் சாதனையை முறியடித்தது பெருமைக்குரியதே. தற்போது இதற்காக எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் சகவீரர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here