தமிழகத்தில் நுழையும் உருமாறிய கொரோனா வைரஸ்?? தயார் நிலையில் 1000 படுக்கைகள்!!

0

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த அனைவரும் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சில தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டிற்காக செலுத்தப்பட்டு வருகின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இறப்பு விகிதமும் குறைந்து உள்ளது. மேலும் வரும் 2021 ஜனவரி மாதம் முதல் இந்திய மக்கள் அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது.

LONDON, UNITED KINGDOM 

ஆனால் தற்போது அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் உருமாறிய புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இது தற்போது உள்ள வைரஸை விட 70 சதவீதம் வீரியம் மிகுந்தது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இங்கிலாந்து நாடு அதனை கட்டுப்படுத்தும் வகையில் அணைத்து நடவடிக்கைகளும் எடுத்து வந்துள்ளது. மேலும் இங்கிலாந்து நாட்டில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளன.

பிரிட்டனில் இருந்து வந்த தமிழகம் வந்த 1078 பேர்:

தற்போது பிரிட்டனில் இருந்து சுமார் 1078 பேர் தமிழகம் வந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பிரிட்டனில் இருந்து வந்த அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா அச்சத்தில் மாநில அரசு – பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா??

இதேபோல் அனைத்து விமான நிலையங்களிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு அந்த சோதனைக்கான முடிவை 8 மணி நேரத்தில் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும் லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளவர்களுக்கு சுமார் 1000 படுக்கைகள் தயாராக நிலையில் உள்ளது என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here