Saturday, April 27, 2024

ரெய்னா விலக இது தான் காரணமா?? – பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கருத்து!!

Must Read

ஐ.பி.எல் தொடரில் இருந்து கிரிக்கெட் வீரர் ரெய்னா விலக்கியதற்கான உண்மையான காரணத்தை உடைத்துள்ளார், பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்.

ஐ.பி.எல் தொடர்:

ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருந்ததால், அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 19 ஆம் தேதி போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமீரகத்திற்கு சென்றது. அதன் பின் சென்னை அணியினருக்கு பல பின்னடைவுகள் ஏற்பட்டன. முதலாவதாக, சென்னை அணியினை சேர்ந்த வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

ரெய்னா விலகல்:

இது அணிக்கு பெரும் இழப்பு என்று கூறி வந்த நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணமாக அணியின் முக்கிய வீரராக கருதப்பட்ட சுரேஷ் ரெய்னா தானும் விலகுவதாக தெரிவித்தார். இது பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

raina
raina

அவர் சில தனிப்பட்ட காரணங்களுக்கான தான் இந்தியா திரும்பி உள்ளார் என்று முதலில் கூறப்பட்டாலும் அமீரகத்தில் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதால் தான் அவர் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதே போல் ரெய்னாவிற்கு ஹோட்டலில் அறை வசதி சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றி போதை:

தனது அபராத தொகையான ஒரு ரூபாயை செலுத்திய பிரஷாந்த் பூஷன்!!

ஐ.பி.எல் தொடரில் இருந்து ரெய்னா விலக்கியதற்காக அவர் கூறியதாவது “வெற்றி சில நேரங்களில் தலைக்கு ஏறும்போது இப்படி தான் நடக்கும் என்றும் ரெய்னா கண்டிப்பாக வருந்துவார், 11 கோடி ரூபாய் இழந்ததற்காக” என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார். இந்த கருத்தால் பலரும் கடுமையான அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -