Sunday, April 28, 2024

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் உள்ள குளறுபடி – விரிவான விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு!!

Must Read

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் பல குளறுபடிகள் இருந்து வந்ததால் , அதனை முறையாக விசாரிக்க தமிழக பள்ளி கல்வி துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு:

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொது தேர்வுகளை ரத்து செய்திருந்தது. அதனால், மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டனர். அவருக்கு மதிப்பெண் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

அதில், கூறப்பட்டது என்னவென்றால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்ற 12,690 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

SSLC result 2020
SSLC result 2020

அதில், மாணவர்கள் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர் என்றும், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 பேர் என்றும் கூறப்பட்டது. இவர்கள், அனைவரும் தேர்ச்சி அடைந்து விட்டனர், அதனால், முதல் முறையாக தேர்ச்சி 100 சதவீதம் என்று கூறப்பட்டது.

குளறுபடி:

இதில், என்ன குளறுபடி என்றால் தேர்வுத்துறை சார்பில் கூறப்பட்டிருந்த தேர்ச்சி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

எந்த அளவு என்றால், 5,177 மாணவர்களின் பெயர்களையே காணவில்லை. இப்படி ஒரு குளறுபடி இருந்ததால், அனைவர் மத்தியிலும் குழப்பம் மற்றும் சந்தேகம் எழுந்தது.

விசாரணை:

இந்த குழப்பம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவர் சார்பிலும் கேட்டுக்கொள்ளப்பட்டது. எப்படி பள்ளிக்கு வராத இடைநின்ற மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரித்தது எப்படி? என்பது குறித்தும் விசாரிக்க பள்ளி கல்வி துறை ஆணையர் சிபி தாமஸ் வைத்தியன் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -