Saturday, May 11, 2024

புதிய அறிவிப்பு வரும் வரை ரயில்கள் சேவை ரத்து – ரயில்வே அமைச்சகம் தகவல்!!

Must Read

கொரோனா பரவல் காரணமாக இன்னும் புதிய அறிவிப்பு வரும் வரை சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் அதிகரித்து வந்த நிலையில், ரயில்வே துறை சார்பில் மார்ச் மாதம் முதல் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஆனால், புலம் பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வந்தன.

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் உள்ள குளறுபடி – விரிவான விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு!!

indian railways
indian railways

மற்ற ரயில் சேவைகளுக்கான தடை உத்தரவு ஆகஸ்ட் 12 ஆம் தேதி உடன் முடிவு பெற இருந்தது. ஆனால், இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது புதிய அறிவிப்பு வரும் வரை தடை உத்தரவு நீடிக்கபடும் என்று கூறியுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

முன்தினம் அனைத்து சமூக வலை தளங்களிலும் வெளியான ரயில்வே குறித்தான செய்தி முற்றிலும் தவறானது என்று அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மும்பையில் ரயில் சேவை:

புதிய உத்தரவு வரும் வரை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், இந்தியாவில் உள்ள 230 சிறப்பு ரயில் சேவைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மும்பை மக்களின் வசதிக்காக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை வாழ் மக்களே., இந்த வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதால், 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -