பிளாப் நடிகருடன் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஸ்ரீதிவ்யா – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

தமிழில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாகும் லெவலில் இருந்து தற்போது காணாமல் போனவர் தான் ஸ்ரீதிவ்யா. தற்போது எந்த படவாய்ப்பும் இல்லாத நிலையில் கௌதம் கார்த்தியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஸ்ரீ திவ்யா

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகை கலக்கிக் கொண்டிருப்பவர்கள் பலர். ஷாலினி, சிம்பு, ஹன்சிகா என சொல்லிக்கொண்டே போகலாம். சிறு வயதில் இருந்தே குழந்தையாக பார்த்து ரசித்ததால் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெறுகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ஸ்ரீ திவ்யா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிறகு மங்கையாக உருவெடுத்து நாயகியாகவும் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அதன் பிறகு அவர் தமிழில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு அமோக வரவேற்பை பெற்று தந்தது.

பல ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். அவரது குழந்தை தனமான நடிப்பு மக்களை அவர் பக்கம் வெகுவாக இழுத்தது. மேலும் அவர் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். முன்னணி நடிகையாகும் அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அதன் பிறகு இவரின் படங்கள் சற்று தோல்வியை தழுவ ஆரம்பித்தது. தொடர்ந்து தோல்வியை பார்த்ததால் படவாய்ப்புகளும் குறைந்தது.

நிஷாவை பற்றியே புரணி பேசும் அர்ச்சனா, ரியோ & ரமேஷ்!!

இந்நிலையில் நீண்ட நாட்களாகவே காணாமல் போனார். அதன் பிறகு வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவர் நடித்தால் அவருக்கு நாயகியாக தான் நடிப்பேன் என்று கூறியதால் லட்சுமி மேனன் அதில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றிக்கு பிறகு, தான் செய்த தவறையும் நினைத்து வருந்த தான் செய்தார்.

இந்நிலையில் அவர் பிரபல நடிகரான கார்த்தியின் மகன் கெளதம் கார்த்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தான் இந்த படத்தை இயக்குகிறார். ஆனால் இந்த தகவலை அறிந்த ஸ்ரீதிவ்யா ரசிகர்கள் பலரும் சந்தோஷமடைந்தாலும் தொடர்ந்து தோல்வியை தழுவிய கௌதமுடன் இணைந்து நடிப்பதா?? என்று கவலையில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here