தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

0

தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்:

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு தற்போது வரை கிராமப்புற ஊரக தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் சார்பாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதனை தமிழக எதிர்கட்சியினர் சுட்டிக்காட்டி தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

election tn 2020
election 

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சங்கர் என்பவர் ரிட் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘2011 ஆம் ஆண்டிற்கு பிறகு மக்கள் தொகையினை மானாவாரியாக கணக்கெடுத்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும். அதே போல் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையினை ரத்து செய்ய வேண்டும்’ இவ்வாறாக தெரிவித்திருந்தார்.

வழக்கிற்கான தீர்ப்பு:

இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஏ.பாப்டே கொண்ட அமர்வு விசாரித்தது. தீர்ப்பில் கூறப்பட்டதாவது ‘தமிழகத்தில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் 9 மாவட்டங்கள் உட்பட அனைத்திற்கும் 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின் அடிப்படியில் தான் தேர்தல் நடத்த வேண்டும். அதே போல் 3 வாரத்திற்குள் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை!!

அதன் பின் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் கொரோனா காலம் என்பதால் தேர்தலை நடத்த சாத்தியக் கூறுகள் குறைவு தான் என்றும், போதுமான வாக்கு இயந்திரங்கள் இல்லாததால் தேர்தலை மேலும் 6 மாதங்களுக்கு பிறகு நடத்த அனுமதி வேண்டி மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாதிட்ட வக்கீல் கேட்டிருந்தார். இதனை பரிசீலித்த நீதிபதிகள் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here