அசத்தலான ‘ஆம்லேட் கறி’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

சைவ பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்று என்றால் அது முட்டை தான். மேலும் முட்டையில் பல ப்ரோட்டீன்களும் உள்ளன. இந்த முட்டையை வைத்து பல விதமான ஸ்னாக்ஸ்களை எளிதாக செய்து முடிக்கலாம். அந்த வகையில் இப்பொழுது முட்டையை வைத்து ‘ஆம்லேட் கறி’ எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 4

பட்டை, கிராம்பு

வெங்காயம் – 2

இஞ்சிபூண்டு விழுது

மஞ்சள்தூள்

மிளகாய்த்தூள்

தக்காளி – 1

சீரகத்தூள்

மல்லித்தூள்

கரம் மசாலா

முந்திரி

தேங்காய் பால் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்

செய்முறை

முதலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது அதனை ஆம்பளைட் போல ஊற்றி எடுத்துக்கொள்ளவும். அதனை சதுரமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது அதில் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பச்சைவாடை போனதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் அரைத்து வைத்த தக்காளி விழுதை அதில் சேர்த்து வதக்கவும்.

இப்பொழுது இந்த கலவை ஓரளவிற்கு சுருண்டு வந்ததும் அதில் அரைத்த முந்திரி விழுதை சேர்க்கவும். அதன் பிறகு தேங்காய் பாலையும் சேர்க்கவும். இப்பொழுது அதில் ஆம்லேட்டை அதில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆம்லேட் கறி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here