டி20 ஆசிய கோப்பை போட்டி எப்பொழுது.?? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு..!

0
BCCI team
BCCI team

டி20 ஆசிய கோப்பை போட்டி நடத்துவது குறித்த கூட்டம் இணையம் வழியாக அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

பிசிசிஐ

இந்த வருட செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பை போட்டி நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவும் இந்த போட்டியில் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுவதாக உள்ளது. 2018 உல் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Sourav Ganguly
Sourav Ganguly

ஆனால் பாக்கிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது. அதே போல் இந்த வருடமும் அங்கு நாடாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரங்கத்திலும் இதர ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறவும் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊக்கமருந்து புகார் – தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு 4 ஆண்டுகள் தடை..!

மேலும் இந்த போட்டி எங்கு எப்பொழுது நடைபெற வேண்டும் என முடிவெடுப்பதற்கு இணையம் வழியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பிசிசிஐ சார்பாக அதன் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.

cricket team
cricket team

இந்த கூட்டம் குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “இந்த வருடம் ஆசிய கோப்பை நடத்துவது குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நாட்டில் போட்டிகளை நடத்துவது என விவாதிக்கப்பட்டது. இறுதி முடிவு குறித்து தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here