ஊக்கமருந்து புகார் – தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு 4 ஆண்டுகள் தடை..!

0
gomathi marimuthu
gomathi marimuthu

தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை கோமதி மாரிமுத்துவிடம் செய்யப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்த காரணத்தால் அவருக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆசிய தடகள சாம்பியன்:

2019ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் 800மீ பிரிவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை கோமதி மாரிமுத்து. அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட ஊக்கமருந்து புகாரால் முதற்கட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியான காரணத்தால் அவர் தற்காலிகமாக போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சச்சினை 100வது சதம் அடிக்கவிடாமல் அவுட்டாக்கியதால் கொலை மிரட்டல் – இங்கிலாந்து வீரர்

இந்த காரணத்தால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இவர் போட்டிகளில் பங்கேற்க தடை செய்யப்பட்டு உள்ளது. மேற்கொண்டு மார்ச் 18, 2019 முதல் மே 17, 2019 வரை இவர் செய்த சாதனைகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தெரிவித்த கோமதி மாரிமுத்து, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து எதையும் நான் பயன்படுத்தவில்லை. மேல்முறையீடு செய்யப்போகிறேன் இந்த விஷயத்தில் மாநில அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தான் சாப்பிட அசைவ உணவில் அது இருந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here