சச்சினை 100வது சதம் அடிக்கவிடாமல் அவுட்டாக்கியதால் கொலை மிரட்டல் – இங்கிலாந்து வீரர்

0
sachin
sachin

ந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர்.பேட்டிங்கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார்.கிரிக்கெட் வரலாற்றில் சதத்தில் சதம் கண்ட ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.சச்சினின் 100வது சதம் அடிக்கும் முன் அவுட்டாக்கினால் கொலை செய்துவிடுவோம் என  பவுலரையும் அம்பயரையும் மிரட்டியுள்ளனர்.

ஊரடங்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

2011க்கு பின் 2012ல் தான் சச்சின் 100வது சதம் அடித்தார்

sachin tendulkar
sachin tendulkar

2011-ம் ஆண்டு சச்சின் 99-வது சதத்தை பதிவு செய்தாலும் நீண்ட போட்டிகளுக்கு பின்னே தனது 100-வது சதத்தை பதிவு செய்தார். இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது சச்சின் 90 ரன்களை கடந்து விளையாடினார். இந்த போட்டியில் சச்சின் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.ஆனால் 91 ரன்கள் எடுத்திருந்த போதுடிம் பிரெஸ்னன் வீசிய பந்தில் எல்.பி.டபுள்.யு முறையில் வெளியேற்றப்பட்டார். ஆனால் பந்து காலில் படவில்லை என்று அப்போது சர்ச்சை எழுந்தது. நடுவர் ராட் டக்கெர் தான் அவுட் வழங்கினார்.2012-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100-வது சதத்தை சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தார்.

இங்கிலாந்து பவுலருக்கு கொலை மிரட்டல்

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இங்கிலாந்து பவுலர் டிம் பிரெஸ்னன் நினைவு கூர்ந்துள்ளார்.அதில், 2011-ம் சச்சினை அவுட் செய்த பின்னர் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பீர்கள் என்று எல்லாம் பேசினார்கள்.சச்சினுக்கு அவுட் கொடுத்த ராட் டக்கெருக்கும் இதுப்போன்ற கொலை மிரட்டல் வந்துள்ளது. நாங்கள் இருவரும் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்“ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here