தமிழ்வழி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – கேரள அரசு தொடக்கம்..!

0
online class example
online class example

கொரோனா பாதிப்பால் நாடு எங்கும் பெரிய பாதிப்பு அடைத்து உள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் இந்த ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றனர். இந்நிலையில் தமிழ் வழி பாடங்கள் நடத்த கேரள அரசு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

கேரளாவில் ஆன்லைன் வகுப்புகள்:

கொரோனா ஊரடங்கால் பல நிலைகளில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் கல்வியும் ஒன்று ஆகும். அதனால் மத்திய அரசு கல்வி அமைச்சங்களுக்கு ஆன்லைன் இல் பாடங்களை நடத்த அறிவுறுத்தியது. இதனை கேரள அரசும் பின்பற்றியது. ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த ஆரம்பித்தது.

தமிழ் வழி வகுப்புகள்:

ஆனால் இடுக்கி மாவட்டத்தில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் உடும்பஞ்சோலா, பீர்மேடு, தேவிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ் வழிக் கல்வியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தனியாக தமிழ் வழியில் பாடம் நடத்த கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ் வழி மாணவர்கள் பாதிப்பு:

மாநில அரசு ஆன்லைன் கற்றல் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தாலும் தமிழ் வழி வகுப்புகளைத் தொடங்கவில்லை. இதனால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பெரிது பாதிக்க பட்டனர். இது தொடர்பான செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் அவர்கள் கூறியதாவது”நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து கொண்டு தான் வருகிறோம் மேலும் அதற்க்கான புதிய மென்பொருள் வடிவமைப்பை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் மாணவர்கள் 3 நாட்களில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று பயன்பெற வழி வகை செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

முதலில் உயர் நிலை மாணவர்களுக்கு இந்த வகுப்புகள் தொடங்கவுள்ளதாகவும் பின்பு கலந்து கொள்ள முடியாத பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here