ஊரடங்கில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

0
minister sengottaiyan
minister sengottaiyan

கொரோனா பரவல் தமிழகத்தில்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய்யை கட்டுப்படுத்த  ஊரடங்கு அமலில் உள்ளது.  இதனால், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.  எனவே மாணவர்களின் உடல்நலன் கருதியும்  மற்றும் எதிர்கால நலன் கருதியயும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலில் உள்ள ஊரடங்கு காலத்தில் பள்ளி,கல்லூரி நிறுவனங்கள் தங்களிடம் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் கல்வி கட்டணம் செலுத்த கூறி கட்டாயபடுத்த கூடாது என தமிழக அரசு ஏற்கெனவே  உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

சில பள்ளிகள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடம் கல்வி கட்டணம் செலுத்தும்படி அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.கோவையில் ஒரு பள்ளியிலும், சென்னையில் 3 பள்ளிகளிலும்  இதுபோன்ற கட்டண வசூலை இலக்காக கொண்டு செயல்படுவது பற்றி புகார்கள் எழுந்தன.  அவற்றுக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன.இதுபற்றி பேசிய தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த பள்ளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  அரசின் உத்தரவை மீறி, கொரோனா காலத்தில் கல்வி கட்டணம் வசூலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

To Join WhatsApp Group Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here