தமிழகத்தில் 4 நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

0
Train
Train

தமிழகத்தில் கோவை – அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு – திருச்சி ஆகிய நகரங்களுக்கு இடையே சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சிறப்பு ரயில்கள்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரயில் சேவைகள் தடைபட்டு இருந்தன. இந்நிலையில் முக்கிய நகரங்களுக்கு மட்டும் தெற்கு ரயில்வே சார்பில் அவ்வப்போது சிறப்பு பயணியர் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 12ம் தேதி முதல் கோவை – அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு – திருச்சி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

கோவை – அரக்கோணம் ரயில்:

ஜூன் 12ம் தேதி முதல் கோவை – அரக்கோணம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை (ஜூன் 10) 8 மணிமுதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

செங்கல்பட்டு – திருச்சி ரயில்:

ஜூன் 12ம் தேதி முதல் செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம், கும்பகோணம் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். செங்கல்பட்டில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.10 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் மீண்டும் திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.40 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

கொரோனா ஆம்புலன்ஸ் சேவை – அவசர எண்ணை அறிவித்த தமிழக அரசு..!

இந்த சிறப்பு ரயிலானது மேல்மருவத்தூர், விழுப்புரம், திருப்பாதிரி புலியூர், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேலும் திருச்சியில் இருந்து அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here