ரூ.1,000 உரிமை தொகைக்கான புதிய விண்ணப்பம்? இந்த மாதம் முதல் பணம் கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும், “கலைஞர் மகளிர் திட்டம்”, கடந்த செப்டம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இதுவரை 1.7 கோடி பேர் பயன் பெற்று வரும் நிலையில், இத்திட்டத்தில் கூடுதலாக 2.30 பேர் இணைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம்

தற்போது மக்களவைத் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், ஜூன் 2வது வாரத்தில் புதிய விண்ணப்பங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு , ஜூலை 15 ஆம் தேதி முதல் உரிமை தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here