Thursday, May 2, 2024

இசை உலகின் “சகாப்தம்” மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழ்வார்!!!

Must Read

இசை பிரியர்களின் காதலனாய், 55 வருடங்களுக்கு மேலாக இசை துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்வை பற்றியும் இசைக்கான அவரது அர்ப்பணிப்பு பற்றியும் பார்ப்போம்.

“இசையுலகிற்கு ஓர் பொக்கிஷம்”

ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பி தமிழ் திரையுலகில் 1966 ஆம் ஆண்டில் இருந்து தான் தனது இசை பயணத்தை ஆரம்பித்தார். தனது தாய்மொழியான தெலுங்கில் தான் முதன் முதலாக பாட ஆரம்பித்தார். இசை மீது அளவற்ற காதலை வைத்தததால் தான் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது. தனது இசை திறனை வளர்ப்பதற்காக இசை பாட மட்டும் கற்றுக்கொள்ளாமல், இசை வாத்யங்களையும் வாசிக்க கற்றுக்கொண்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

spb with raja
spb with raja

தனது ஆரம்ப காலத்தில் ஒரு மெல்லிசை குழுவினை நடத்தி வந்தார். அதில் அவரது நண்பர்களான இளையராஜா மற்றும் கங்கை அமரன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் “இயற்கையெனும் இளைய கன்னி” என்ற பாடலை தான் பாடினார். அவரது குரலுக்கு தமிழ் மக்கள் அனைவரும் அடிமை ஆகினர்.

அயராத உழைப்பு:

தனது தேர்ந்த குரலால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்திழுத்தார். அவர் எண்ணற்ற பாடல்களை பல மொழிகளிலும் பாடினார். இன்றும் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

இளம் வீரருடன் காதலா?? இன்ஸ்டா ஸ்டோரியில் “ஹார்ட்” பறக்கவிட்ட சச்சின் மகள் சாரா!!

அவர் பாடல்கள் மட்டும் பாடவில்லை, திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடிப்பு திறனை பார்த்து அவரது ரசிகர்கள் வாய் அடைத்து போயுள்ளனர். தனது பாட்டு திறமைக்காக பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், அவரது குரல் மூலமாக பலரது மனங்களிலும் இன்னும் வாழ்வார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -