Wednesday, April 17, 2024

இளம் வீரருடன் காதலா?? இன்ஸ்டா ஸ்டோரியில் “ஹார்ட்” பறக்கவிட்ட சச்சின் மகள் சாரா!!

Must Read

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இளம் கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது அனைவரயும் வேறு கோணத்தில் ஆராய தூண்டியுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் மகள்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரர் தான் சச்சின் டெண்டுல்கர். அவர் இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளார். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். பின், தற்போது ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் உரிமையாளராகவும் உள்ளார். அவரது மகள் சாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த புகைப்படம் தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

sara and Shubman Gil
sara and Shubman Gil

இதனால் பலரும் பலவிதமாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்படி என்ன வைத்தார்?? அவர் தனது ஸ்டோரியில் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடும் இளம் வீரர் சுப்மான்கில் புகைப்படத்தை தான் வைத்திருந்தார். மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் ஐ.பி.எல் தொடரில் விளையாடியது. அப்போது சுப்மான்கில் ஒரு டைவ் அடித்து பந்தை பிடித்திருப்பார்.

பறக்கவிடப்பட்ட ஹார்ட்:

அதனை தான் சாரா தனது இன்ஸ்டாவில் வைத்துள்ளார். இதனால் அவர் சுப்மான்கிலை காதலிக்கிறார் என்று அனைவரும் நம்புகின்றனர். கூடுதலாக அவர் பதிவு செய்துள்ள இந்த ஸ்டோரியில் அவரது புகைப்படத்திற்கு மேல் காதலை குறிக்கும் ஹார்ட்களை பதிவு செய்துள்ளார்.

டிசம்பர் வரை இலவச கொரோனா நிவாரண பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

sara instragram story
sara instragram story

இதனால் அனைவரும் சச்சின் மகள் அவரை தான் காதலிக்கிறார் என்று கூறி வருகின்றனர். இவர் இதற்கு முன்பாக கிரிக்கெட் வீரர் சுப்மான்கில் உடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழும் சரஸ்வதியும் சீரியல் ட்விஸ்ட்.., காரியத்திற்காக நடிக்கும் அர்ஜுன்.., கிளைமாக்ஸ் இதுதான்!!

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் சில முக்கிய சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளது. மேலும் சில சீரியல்கள் களமிறங்க இருப்பதாகவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -