உடம்பில் 28 வகை பாம்புகளை கொண்டு மசாஜ் – எகிப்து மக்கள் ஆர்வம்!!

0

தற்போது எகிப்து நாட்டில் மக்கள் நலனுக்காக புது வகையான மசாஜுகளை அறிமுகம் செய்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் புதிதாக பாம்பு மசாஜை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது எகிப்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பாம்பு மசாஜ்:

நாட்டில் உள்ள மக்கள் சிலர் கடுமையாக உடல் உழைப்பினால் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது மசாஜ் செய்து தங்களது உடற் அசதியை நீக்குகின்றனர். மனிதர்களின் உடல் மற்றும் மன வலியை போக்குவதற்கு மசாஜ் மிகவும் உதவிகரமாக உள்ளது. மேலும் மருத்துவத்துக்காகவும் மசாஜ் செய்யப்பட்டு வருகிறது. தற்போது எகிப்து நாட்டில் புது வகையான மசாஜுகளை செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் ஒன்று தான் பாம்பு மசாஜ். மக்கள் சிலர் தங்களது உடல் வலியினை சரி செய்வதற்காக மசாஜ் செய்ய வருகின்றனர். புதிதாக வந்துள்ள பாம்பு மசாஜ் மனிதர்களின் உடல் வலியை போக்கும் என்று கூறுகிறார்கள். எகிப்து நாட்டில் கெய்ரோ என்னும் நகரில் ஓர் மசாஜ் சென்டர் உள்ளது. அந்த சென்டர் தான் தற்போது பாம்பு மசாஜை அறிமுகப்படுத்தியுள்ளது. மசாஜ் செய்ய வருபவர்களை குப்புற படுக்க வைத்து அவர்கள் முதுகில் மேல் மலைப்பாம்பு, சாறை பாம்பு போன்ற 28 வகையான பாம்புகளை விடுகின்றனர்.

ஹோட்டல் & பார்களுக்கு அனுமதியில்லை – புத்தாண்டு கட்டுப்பாடுகளை வெளியிட்ட சென்னை காவல்துறை!!

அந்த பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை என்பதால் மக்கள் அச்சமின்றி இந்த மசாஜை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பாம்புகள் தலை பகுதி முதல் கால் பகுதி வரை ஊர்ந்து சென்று வரும். சுமார் 30 நிமிடம் இந்த மசாஜ் செய்யப்படும். பாம்புகள் நம் உடலில் ஊர்ந்து செல்வதால் நம் உடலில் ஏற்பட்டிருக்கும் வலிகள் எல்லாம் நீங்கிவிடும் என்று கூறுகின்றனர். மேலும் இந்த மசாஜுக்கு இந்தியா மதிப்பில் சுமார் 500 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மசாஜுக்கு எகிப்து மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here