ஹோட்டல் & பார்களுக்கு அனுமதியில்லை – புத்தாண்டு கட்டுப்பாடுகளை வெளியிட்ட சென்னை காவல்துறை!!

0

தற்போது கொரோனா பரவலில் இருந்து நாம் முழுதுமாக மீளவில்லை. எனவே சில கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. நாளையுடன் இந்த ஆண்டு முடிந்து புது ஆண்டு பிறக்கப்போவதால் நாளை இரவு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். தற்போது இதற்கான கட்டுப்பாடுகளை சென்னை காவல் துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா:

கடந்த ஆண்டு 2019 நவம்பரில் சீனாவில் இருந்து கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவி உலக நாடுகள் அனைத்தையும் பாதித்தது. இன்னும் அதன் பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை. அதற்குள் கொரோனா உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போது இந்த ஆண்டு முடியும் என்று உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏனென்றால் இந்த வருடம் மிகவும் மோசமான வருடமாகவே சென்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்கள் அனைவரும் புது ஆண்டில் நமக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு புது ஆண்டு வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த ஆண்டு முடிய இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது. மேலும் புத்தாண்டு என்றாலே இரவு முழுவதும் மக்கள் கொண்டாட்டம் ஆரவாரம் என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஆண்டு என்பதால் சென்னை காவல் துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

#IndvsAus 3வது டெஸ்ட்டில் ரீஎன்ட்ரி கொடுக்கும் டேவிட் வார்னர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

நாளை இரவு 10 மணிக்கு உணவகங்கள், ஹோட்டல் மாற்றும் கிளப் போன்றவற்றை மூடிவிட வேண்டும். காரணம் இங்கு இரவுக்கு மேல் கூட்டம் கூட்டமாக மக்கள் வருகை தருவார்கள். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்கள். மேலும் விபத்துகளை தடுப்பதற்காகவும் இரவு நேரங்களில் பைக் ரேஸ்களை கட்டுப்படுத்துவதற்காகவும் சென்னையில் உள்ள மேம்பாலங்கள் முழுவதும் இரவு மூடப்படும். மேலும் மெரினா கடற்கரையிலும் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே மக்கள் செல்ல அனுமதி. இதனை கவனிப்பதற்காக சுமார் 300 சோதனை சாவடிகளை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவார்கள் என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here