வடிவேல் பாலாஜி பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்ற சிவகார்த்திகேயன் – அந்த மனசு தான் கடவுள்!!

0

பிரபல சின்னத்திரை காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் காலமானார். 42 வயதே ஆன அவரது மறைவு குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மகள் மற்றும் மகனின் படிப்புச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வடிவேல் பாலாஜி மறைவு:

சாதாரண பிணவறை ஊழியராக இருந்து, தனது அசாத்திய திறமையால் சின்னத்திரையில் காமெடி கிங் ஆக உருவெடுத்தவர் வடிவேல் பாலாஜி. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் அது இது எது (சிரிச்சா போச்சு), கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகள் இவரை மக்களிடையே பிரபலமாக்கியது. வெளிநாடுகளிலும் பல காமெடி நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். இவரது டைமிங் கவுன்டர்களுக்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இப்படி தனது திறமையால் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கலைஞன், கடைசி காலத்தில் மிகுந்த துயரங்களை அனுபவித்து உயிரிழந்தது அனைவரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

vadivel balaji
vadivel balaji

15 நாட்களுக்கு முன்னர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு கை, கால்கள் செயலிழந்தன. பல லட்சங்களை செலவழித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது மரணத்திற்கு தனியார் மருத்துவமனையின் அலட்சியமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. முடிவில் போதிய பணம் இல்லாத காரணத்தால் சென்னை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சில மணிநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.

நான் தினமும் கோமியம் குடிப்பேன் – அதிரவைத்த நடிகர் அக்ஷய் குமார்!!

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை சேத்துப்பட்டியில் வைக்கப்பட்டு உள்ள வடிவேல் பாலாஜி உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார். நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படி மேலே சென்று வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் படிப்புச் செலவை ஏற்றுள்ளார். அவரது செயலுக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here