காவிரி டெல்டாவில் எண்ணெய் கிணறுகள் தோண்டும் பணி – ஓஎன்ஜிசிக்கான அனுமதி மேலும் 3 ஆண்டுகள் நீட்டிப்பு??

0

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கான அனுமதியை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விவசாயிகள், அரசியல் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில் மத்திய நிபுணர் குழுவின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

எண்ணெய் கிணறுகள்:

ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் 24 இடங்களில் எண்ணெய் கிணறுகளை அமைக்க அனுமதி பெற்றது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் இதுவரை 16 கிணறுகள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள பணிகளை முடிக்க ஓஎன்ஜிசி சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு மேலும் 3 ஆண்டுகள் அனுமதியை நீட்டிக்க பரிந்துரை செய்துள்ளது விவசாயிகளை கோபமடைய செய்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஓஎன்ஜிசி நிறுவனம் மொத்தம் 104 கிணறுகள் அமைக்க உள்ளது. அதில் 87 கச்சா எண்ணெய் கிணறுகள், 17 இயற்கை எரிவாயு கிணறுகள் தோண்டப்பட உள்ளது. இதனால் மேலும் 104 கிணறுகள் தோண்ட அனுமதி அளிக்கக்கூடாது என பல தரப்பினரும் கோரி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் அமைப்பதால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

அக்டோபருக்குள் இந்தியாவில் 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் மூலம் டன் கணக்கில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது ஓஎன்ஜிசி நிறுவனம். இதனால் நீர் ஆதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து எண்ணெய் கிணறுகள் அமைக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here